இருமுகன் - மிரட்டும் தோற்றத்தில் விக்ரம்


Posted by-Kalki Teamஅரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் இருமுகன் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மலேசியா, சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விக்ரமுடன் நயன்தாரா முதன் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் இருவரது நடிப்பும் நிச்சயம் அனைவரின் பாராட்டையும் பெறும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.விக்ரமுடன் நயன்தாரா சேர்ந்து நடிக்க மாட்டார் என இப்படம் ஆரம்பமாவதற்கு முன் ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அவர் விக்ரமுடன் நடிக்க ஆரம்பித்ததும் பலரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அது மட்டுமல்ல படப்பிடிப்பில் நயன்தாரா தரும் ஒத்துழைப்பைப் பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். அந்த அளவிற்கு நட்பு ரீதியாக அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறார், முன்னணி நடிகை என்ற எந்த பந்தாவும் அவருக்கில்லை என்கிறார்கள்.இதனிடையே, படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிப்பதால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் தனி கவனம் செலுத்தியிருக்கிறாராம். அதற்காக உருவாக்கப்பட்ட அவருடைய தோற்றம் மிகவும் மிரட்டலாக வந்துள்ளதாம். தமிழ் சினிமாவில் இதுவரை வந்துள்ள வில்லன் நடிப்பை விக்ரம் தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்கிறார்கள்.


Post Comment

Post Comment