சினிமாவிலும் விஜய்க்கு அம்மாவாக வேண்டும்! -ஷோபா சந்திரசேகர் :


Posted by-Kalki Teamநடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர். ஆரம்ப காலத்தில் ஒரு மேடை பாடகியாக இருந்தவர். அதோடு பக்தி ஆல்பங்களும் பாடியுள்ளார். பல திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார். இன்னிசை மழை, நண்பர்கள் ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், பல படங்களுக்கு கதை வசனம் எழுதியதோடு, பல படங்களை தயாரித்தும் உள்ளார். ஆனால் எந்த படத்திலும் அவர் நடித்ததில்லை. தனது மகன் விஜய்யுடன் மட்டும் ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்திலும், அவரது மகள் திவ்யா தெறி படத்திலும் நடித்திருக்கும் நிலையில், ஷோபா சந்திர சேகருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதுவும் மகன் விஜய்க்கு அம்மாவாகவே நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். சரியான சந்தர்ப்பம் அமையும்போது கண்டிப்பாக விஜய்யின் அம்மாவாக நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post Comment

Post Comment