சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்;


Posted by-Kalki Teamசுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம். நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:

*பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும்.

*பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம். பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள்.

*மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியது தான். அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை.

*அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல. கரப்பான்களும், பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலும் சிறிய படங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

*வீட்டை போட்டோ ஸ்டுடியோ ஆக்கி விடாதீர்கள் ஆல்பம் வைத்துக் கொள்ளுங்கள்.

*இலவசமாகக் கிடைக்கிறது என்று வீடு முழுவதும் காலண்டர்களை மாட்டி வைக்காதீர்கள்.

*பால் கணக்கு,டெலிபோன் நம்பர் ஆகியவற்றை சுவற்றில் எழுதி வைக்காதீர்கள். சிறிய டயரியில் குறிக்கப் பழகுங்கள்.

*குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்கள் புழங்கப் பழகுங்கள்.

*கொடியில் துணிகளைத் தோரணமாக தொங்க விடாதீர்கள். பார்க்க சகிக்காது.

*தேவைக்கு உணவு தயாரித்து சமையல் அறையில் பழைய உணவுகளின் வாசனை இருந்தால் நன்றாக இருக்காது.

*தலையணை சிக்குப் பிடிக்காமல் அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும்.

*ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம்,அந்தந்த இடத்தில் அந்தந்த பொருட்கள் (A place for everything and everything in its place.) என்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


Post Comment

Post Comment