24 படத்தை நேசித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - சூர்யா :


Posted by-Kalki Team24 படத்தை நேசித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி - சூர்யா

சென்னை: 24 படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சூர்யா ரசிகர்கள் கொடுத்துவரும் அபார வரவேற்புக்கு நன்றி என கூறியிருக்கிறார்.

சூர்யா,சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 24 திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதனால் மகிழ்ந்துபோன சூர்யா இப்படத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

24

சூர்யா-சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 24. முதல் படமான 36 வயதினிலே படத்தை 3 கோடியிலும், பசங்க 2 படத்தை 5 கோடியிலும் சூர்யா தயாரித்திருந்தார். இரண்டு பட்ஜெட் படங்களுக்குப்பின் சுமார் 75 கோடி செலவில் 24 படத்தை சூர்யா தனது 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.

டைம் டிராவல்

டைம் டிராவல் கதையென்பதால் சூர்யாவின் முந்தைய படங்களை விட இப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்தனர். முதன்முறையாக 3 வேடங்கள், வில்லன் என்று இப்படத்தில் உடலை வருத்தி சூர்யா நடித்திருந்தார். 2 வருடங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட படம், விக்ரம் குமார் இயக்கம் ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியிருந்தது.

நல்ல வரவேற்பு

கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியா தவிர வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு அபாரமான ஓபனிங் கிடைத்திருக்கிறது. இதனால் விக்ரம் குமார், சூர்யா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

உருக்கமான நன்றி

இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு தனது உருக்கமான நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. 2 சிறிய படங்களுக்குப்பின் 2டி நிறுவனம் எடுத்த பெரிய முயற்சி இப்படம். இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் மற்றும் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி.

இதயத்திலிருந்து

இயக்குநர் விக்ரம் குமார் நாம் நல்ல படத்தை நம்முடைய இதயங்களிலிருந்து உருவாக்கினோம். நமது முயற்சியை ரசிகர்கள் வரவேற்று தங்கள் கைதட்டல்களை வழங்கியுள்ளனர் என்று இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து கூறினார். இப்படத்தை ரசித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.Post Comment

Post Comment