நடிகை பிபாஷா பாசு காதல் திருமணம்... அமிதாப்- ஐஸ்வர்யா ராய் வாழ்த்து!


Posted by-Kalki Teamபிரபல நடிகை பிபாஷா பாசு - நடிகர் கரண்சிங் குரோவர் திருமணம் நேற்று மாலை மும்பையில் நடந்தது.

நடிகை பிபாஷா பாசுவும், இந்தி நடிகர் கரண்சிங் குரோவரும் இணைந்து கடந்த ஆண்டு அலோன் என்ற படத்தில் நடித்தனர். அப்போது, இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.

இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ததால், திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்தனர். நேற்று முன்தினம் மாலை மும்பையில் பிபாஷா பாசு - கரண்சிங் குரோவர் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணம்

வங்காள முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில் இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் பங்கேற்றனர். அன்றைய தினம் மாலை தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில், வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

பிரபலங்கள்

அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அபிஷேக் பச்சன், ரன்வீர் கபூர், சஞ்சய் தத், ரித்தேஷ் தேஷ்முக், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், தபு, தியா மிர்ஸா, ஜெனிலியா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காதல்

37 வயது நடிகை பிபாஷா பாசுவை பொறுத்தவரையில், ஏற்கனவே நடிகர் டினோ மொரியோவுடன் இணைத்து பேசப்பட்டவர். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.

3வது திருமணம்

இது பிபாஷா பாசுவுக்கு முதலாவது திருமணமாக இருந்தாலும், அவரது காதல் கணவரான 34 வயது கரண்சிங் குரோவருக்கு 3 - வது திருமணம் ஆகும். ஏற்கனவே, அவர் டி.வி. நடிகைகள் ஸ்ரத்தா நிகாம், மற்றும் ஜெனிபர் விங்கெட் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.Post Comment

Post Comment