சபாஷ் நாயுடு - கமல்ஹாசனின் புதிய படம் துவங்கியது


Posted by-Kalki Teamகமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் முதன் முறையாக ஒரே படத்தில் நடிக்கும் புதிய படத்திற்க சபாஷ் நாயுடு என்று பெயர் வைத்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று காலை நடைபெற்றது. இந்தத் தமிழ்த் தலைப்பை இளையராஜாதான் சொன்னார் என சில தினங்களுக்கு முன்பே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.தசாவதாரம் படத்தில் 9 கதாபாத்திரங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரமாக விளங்கிய பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தைத்தான் ஒரு முழுநீள படத்திற்குரிய கதாபாத்திரமாக இந்தப் படத்தில் கமல்ஹாசன் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர் சங்க நிர்வாகக் குழுவினர், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் பிரபு உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Post Comment

Post Comment