கில் சோன் 2 தமிழில் வெளிவருகிறது :


Posted by-Kalki Teamடோனி ஜா நடித்த கில் சோன் படம் பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் தற்போது வெளிவந்துள்ளது. பொ சாய் சங் இயக்கி உள்ளார். கில் சோன் என்கிற அனிமேஷன் வீடியோ கேமின் கேரக்டர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம்.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகி உள்ளது. உலகை அழிக்க நினைக்கும் தீவிரவாத கும்பல்களை எதிர்த்து தனிமதனிதனாக டோனி ஜா போராடுகிற மாதிரியான கதை. தற்காப்பு கலையில் கைதேர்ந்தவரான டோனி ஜாவின் ஆக்ஷன்தான் படத்தின் பிரதானம்.

தற்போது இந்தப் படம் நிழல் யுத்தம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளி வருகிறது. விஸ்வாஸ் பிலிம்ஸ் சார்பில் விஸ்வாஸ் சுந்தர் வெளியிடுகிறார். மே மாதம் வெளிவருகிறது.


Post Comment

Post Comment